Pages

Monday, June 30, 2008

அன்புள்ள , நண்பர்களுக்கு வணக்கம் மிக நீண்ட நாள்களுக்கு பிறகு உங்களை இந்த புதிய கட்டுரை வழியாக சந்திப்பதின் வழியாக மிக மகிழ்ச்சி . லினக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை .

லினக்ஸ் -1

விண்டோஸ் XP இல் ஓரளவு தெரிந்ததும் அடுத்து என்ன operating system try பண்லாம் என அலைந்துகொண்டிருந்த காலத்தில் கண்ணில் பட்டதுதான் வடுவூர் குமார் அவர்களின் லினக்ஸ் பற்றிய வலை தளம், ஆமாம் விண்டோஸ் நல்லா இருக்கும் போது இதை எதுக்கு உபயோகப்படுத்தனும்?ஞாயமான கேள்வி தான்.சும்மா புதிதாக எதையவுது தெரிந்து கொள்ளலாம் என்ற அர்வக்கோலறு தன் .

லினக்ஸ் என்பது ஒரு பொதுவான பெயர் இதன் source code வெளிப்படையாக கிடைப்பதால் இதைக்கொண்டு பலர் தங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்து வெளியிடுகிறார்கள்.

அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

Red Hat

Fedora

Suse

Debian

Ubuntu

Mandriva

Cent OS

Free BSD

PCLinux

Slackware

இவை அத்தனையும் அதன் அதன் வலைத்தளங்களில் கிடைக்கும்.நான்

நான் தேடியதில் என்னை கவர்ந்தது .ubundu Linux

லினக்ஸில் என்ன என்ன உள்ளத?

இதில் XP யில் உள்ளது போல் multi-user

உபயோகப்படுத்தும் முறை இருக்கிறது.

Fire wall என்ற தடுப்புமுறையும் உள்ளது.

முக்கியமா ஓபன் பீஸ் உள்ளது இதில் Ms office உள்ளது போல் வேர்ட்,எக்ஸ்சல்,பவர்பாயின்டும் இருக்கிறது.

நீங்கள் CAD விருப்பம் உள்ளவரா?Auto cad original வாங்கமுடியாத பாக்கியசாலியா? "Q CAD".இது அவ்வளவும் இலவசம்.Q CAD $ Auto cad ஒப்பிட்டு பார்க்கமுடியாது இருந்தாலும் மோசமில்லை.

ப்ரொக்ராமிஙில் செய்ய கம்பைலர் தேவையா... இருக்கு

Multi Desktop, 3D desktop,


மேலும் Windows இல் இல்லாத பல programs

இன்னும் பல!!! அனைத்தும் இலவசம்.

முன்பல்லாம் லினக்ஸ் மிக எளிமையாக பயன்படுத்த முடியாத Operating system இப்பொழுது Windows Vista வோடு ஒப்பிடும் பொழுது

மிக எளிதான OS.இதில் install செய்யும் பொழுது internet connection இருந்தால் போதும் எல்லா Driver இயும் சர்ச் செய்து install செய்து கொள்ளும் .

மேலும் எங்களால் தீடீர் என Linuxக்கு மாற முடியாது என்பவர்களுக்கு கீழ்க்காணும் link இல் சென்று

apply free CD or Download செய்துகொள்ளலாம். (http://www.ubuntu.com/getubuntu/download) ஓரே ஒரு சிடி அளவுக்கு இருக்கும்.ISO ·யில் கிடைக்கும் அதை CD Writer மூலம் Bootable சிடியாக எழுதிக்கொள்ளவும்.அடுத்து உங்கள் BIOS ஐ முதல் பூட் ஆப்ஷனை சிடிக்கு மாத்திக்குங்க


அதென்னங்க BIOS?

சரி தெரியாதவங்களுக்கு..

BIOS என்பதற்கான முழு விளக்கம் Basic Input Output System--ஆதாவது கனிணி ஆரம்பிக்கும் போது எதையதை பார்க்கவேண்டும் எங்கே தேடவேண்டும் மற்றும் எது முதலில் துவங்க வேண்டும்

போன்றவை எழுதப்பட்டிருக்கும் இடம்.

இதில் boot option என்று ஒன்று இருக்கும் அதில் முதல் பூட்டுக்கு சிடியை பாரு(First bootable Device-Cd Rom) என்று மாத்திவிட்டு மறக்காமல் சேமித்து வெளியேறிவிடுங்கள்.



CD Rom உள்ளே போட்டு கனிணியை ஆரம்பியுங்கள்.

ஏற்கனவே நான் நமது BIOSயில் மாறுதல் செய்தபடியால் கனிணி முதலில் சிடி ராமை பார்க்கும்.நமது லைவ் சிடி ஒரு Bootable OS சிடியாக இருப்பதால்,அதை தொடங்கும்.


இந்த ஸ்கிரீன் வந்தவுடன் “start or install ubundu” select செய்து "என்டர்"ஐ அழுத்தவும்.



முதலில் பல வரிகள் ஓடும் கவலைபடாதீர்கள் அது தனக்கு தேவையான Hardware விபரங்களை எடுத்துக்கொண்டு அதற்கான driversஐ உங்களுடைய Ram யில் போட்டுவைத்துக்கொள்ளும்

இப்படி ஓடினபிறகு ஒரு மொட்டையான திரை வரும்,பயந்திடாதீங்க...

அப்புறம் ……….

ஆஹா வந்துடிச்சு...டெஸ்க்டாப்

உள்ளே போவோமா??

நடப்பது அவ்வளவும் உங்கள் Hard disk ஐ தொடாமல்,

தமிழில்.........